விருத்தாசலம்: காதலித்து திருமணம் செய்ய மறுத்தவருக்கு நேர்த்த கதி? பட்டதாரி பெண் செய்த அதிரடி

அபிராமி விளக்கம் கேட்டும் காதலன் உரிய பதில் கூறவில்லை
திருமணம்
திருமணம்

விருத்தாசலத்தில், காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலனை, காவல் நிலையத்தில் வைத்து சட்டப்படி கரம் பிடித்தார் பட்டாரி பெண் ஒருவர்.

விருத்தாசலம் கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி மகள் அபிராமி (24). பி.எட். பட்டதாரி. திருவண்ணாமலை மாவட்டம் வடகல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் அருண்குமார் (25) பி.எட். பட்டதாரி.

இவர்கள் இருவரும் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படிக்கும்போது காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் கடந்த 3 வருடமாக தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், அருண்குமார் அபிராமியை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அபிராமி விளக்கம் கேட்டும் அவர் உரிய பதில் கூறவில்லை. இதனால், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அபிராமி புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, இருவரையும் அழைத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அருண்குமார் அபிராமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இருவரது உறவினர்கள் முன்னிலையில் விருத்தாசலம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வண்ண முத்து மாரியம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com