கடந்த ஒரு வாரமாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றிலில் வெளியேறும் நீரில் ரசாயன நுரை அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது, கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயன கழிவுகளுடன் கருநிறத்தில் நீர் வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 490 கனஅடியாக இருந்த நிலையில், விநாடிக்கு 701 கனஅடி நீராக அதிகரித்து வந்துக் கொண்டிருக்கிறது
கெலவரப்பள்ளி அணையிலிருந்து 4 மதகுகள் வழியாக 570 கனஅடிநீர் திறந்துவிடப்படும் நிலையில், ஆற்றிலிருந்து வெளியேற்றப்படுவது நீரா அல்லது நுரையா என்கிற அளவிற்கு 2 அடி உயரத்திற்கு நீரிலிருந்து நுரைப்பொங்கி காட்சியளிக்கிறது.
துர்நாற்றத்துடன் நீர் கருநிறத்திலும், நுரை பனிக்கட்டிகளை போன்று காட்சியளிக்கிறது. குமலட்டலை ஏற்படுத்தும் அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கர்நாடகா - தமிழ்நாடு இருமாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து சென்ற நிலையில் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
கடந்தாண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் கெலவரப்பள்ளி அணையை பார்வையிட்டு 47 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
பொய்கை. கோ.கிருஷ்ணன்