கொடைக்கானல்: தூண் பாறையில் யானையின் சிற்பம் - வனத்துறை நடவடிக்கை

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
யானையின் சிற்பம்
யானையின் சிற்பம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தூண்பாறை பகுதியில் யானை உருவம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

தற்போது பள்ளி, கல்லூரி தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாவை அனுபவிக்க பலரும் தற்போது வருகை புரிந்து வருகின்றனர் .

இந்த நிலையில் கொடைக்கானல் பிரதான சுற்றுலா பகுதிகளாக இருக்கும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை, மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூண்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யானைகளின் உருவங்கள் தத்ரூபமாக தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் விரைந்து முடிவடையும் என கொடைக்கானல் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானை சிற்பம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தூண்பாறை நுழைவு வாயில் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக இயற்கை சார்ந்த ஓவியங்கள் சுவரில் வரையற்றப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com