Parkகொடைக்கானல் ரோஜா பூங்காவில், காதலின் அடையாளமான போற்றப்படும் ரோஜாப்பூ, சிவப்பு, ஆரஞ்சு, இளம் சிவப்பு, வெள்ளை என பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகிறது. பூத்து குலுங்கும் ரோஜா மலர்களைக் கண்டு, சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிரதான சுற்றுலா தலமாகத் கொடைக்கானல் இருந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினசரி வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய விருப்பமாக இருப்பது பிரையண்ட் பூங்கா.
கொடைக்கானல் ஏரியின் கிழக்குக் கரையில், மிகவும் பழமையான, அரிய வகை தாவரங்கள் மற்றும் மரங்களின் தொகுப்பைக் கொண்ட ஒரு அழகிய தாவரவியல் பூங்காவாக பிரையண்ட் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1908-ம் ஆண்டு, மதுரையைச் சேர்ந்த வன அதிகாரியான எச்.டி. பிரையண்ட், கொடைக்கானல் ஏரிக்கு அருகில் இந்த அழகிய பூங்காவை அமைத்தார்.
இந்த பூங்காவில் மலர் கண்காட்சிக்கு பல்வேறு மலர்கள் நடவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பிரையண்ட் பூங்காவில், தற்போது ரோஜா மலர்கள் கொத்து கொத்து பூத்து குலுங்கி வருகிறது.
காதலின் அடையாளமான போற்றப்படும் ரோஜாப்பூ, சிவப்பு, ஆரஞ்சு, இளம் சிவப்பு, வெள்ளை என பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகிறது. இந்த ரோஜாப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறது.