224 தொகுதிகளில் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் மஜதவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 73 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் தற்போதே உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் தலைமையகங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களிலும் தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர்.
இதனிடையே காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அடுத்து பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோவிலில் வழிபாடு செய்தார். சென்னையில் கர்நாடக தேர்தல் எதிரொலியாக கமலாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.