Karnataka Election Results: தோல்வி முகத்தில் இருக்கும் பாஜகவின் 8 அமைச்சர்கள்

பாஜகவை சேர்ந்த 8 அமைச்சர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி முகத்தை சந்தித்துள்ளன்னர்.
Karnataka Election Results: தோல்வி முகத்தில் இருக்கும் பாஜகவின் 8 அமைச்சர்கள்

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளில் 219 தொகுதிகளுக்கான முன்னிலைகள் வெளியாகி உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்கிளிலும், பாஜக 75 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த போது, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இருகட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. ஆனால் பாஜகவை பின்னுக்கு தள்ளி பெரும்பான்மையை தாண்டி காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. இதன் எதிரொலியாக காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பாஜகவை சேர்ந்த 8 அமைச்சர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி முகத்தை சந்தித்துள்ளன்னர்.

சிமோகா தொகுதியில் பாஜக உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா பின்னடைவை சந்தித்துள்ளார். பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தொகுதியில் போட்டியிட்ட கோவிந்த கார்ஜோள், சிக்பள்ளாப்பூரில் களமிறங்கிய அமைச்சர் சுதாகர், மண்டியா மாவட்டம் கேஆர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட நாராயணகவுடா, பல்லாரி புறநகர் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீராமுலு, பி.சி.நாகேஷ், முருகேஷ் நிராணி, ஹாலாப்பா ஆச்சார் உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இதனிடையே சித்தராமையாவை எதிர்த்து போட்டியிடும் பாஜக சோமண்ணா 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும் ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகிலும் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றி வாய்ப்புகளை நெருங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூருவிற்கு வருமாறு காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com