10-ம் வகுப்பு தேர்வு முடிவு: மொழிப் பாடத்தில் ஒருவர் கூட 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை - ஏன் தெரியுமா?

மொழிப் பாடத்தில் யாரும் 100க்கு 100 மதிப்பெண் எடுக்காததால், 500 என்ற முழு மதிப்பெண் யாரும் பெறவில்லை
ரிசல்ட்
ரிசல்ட்

10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானதில், மொழிப்பாடத்தில் யாரும் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்காததால், 500 என்ற முழு மதிப்பெண் யாரும் பெறவில்லை.

10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதேபோல், மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற்ற 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

இந்த இரண்டு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒரேநாளில், வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, 10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

இதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதலில் வெளியானது. இதில், தேர்வு எழுதிய 9,22,725 மாணவர்களில் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் 2-ம் இடமும், விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆனால், மொழிப் பாடத்தில் யாரும் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்காததால், 500 என்ற முழு மதிப்பெண் யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com