சென்னை: டி.வி.எஸ். வண்டியைத் திருடி ஆன்லைனில் விற்பனை செய்த பலே கும்பல் - சிக்கியது எப்படி?

வாகனத் திருட்டில் ஈடுபடும் கும்பல்
வாகனத் திருட்டில் ஈடுபடும் கும்பல்

சென்னையில் டி.வி.எஸ் உள்ளிட்ட இரண்டு சக்கர வாகனங்களை திருடி ஆன்லைனில் விற்பனை செய்த பலே கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதைப்பேட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடுபோவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தது.

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஸ்ப்ளெண்டர், டி.வி.எஸ்., ஆக்டீவா போன்ற நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனங்களை குறிவைத்துத் திருடிவந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

இதனைத்தொடர்ந்து, காணாமல் போகும் வாகனங்கள் திருடு போகும் இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, ஏற்கனவே வாகன திருட்டு வழக்கில் சிக்கிய வேலூரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடேஷ் மற்றும் விஷ்ணுவர்தன் மற்றும் ரதீஷ்குமார் ஆகியோர், வாகனங்களை திருடிச் செல்வதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவர்களை மூன்று பேரையும் காவல்துறையினர் ரகசியமாக பின் தொடர்ந்தனர். மேலும், அவர்களை சென்னையில் வைத்து கைது செய்த காவல்துறையினர், அந்த 3 பேரிடம் தொடர் விசாரணை நடத்தினர். இதில், திருடப்படும் வாகனங்களை இணையத்தில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதற்காக பழைய வாகனங்களை வாங்கி அதன் ஆவணத்தைப் போலியாகத் தயாரித்தும், வாகனத்தில் உள்ள சேசிங் என்னையும் அழித்து, திருட்டு வாகனத்தில் புதிய சேச்சிங் எண்ணை பதிவு செய்தும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த 12 இருசக்கர திருட்டு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com