திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே அண்ணனூர் தேவி நகரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (32). இவர், முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.
திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராகப் பணியில் இருந்தபோது கடந்த 5ம் தேதி வாகனம் விபத்திற்குள்ளானது. இதனால் வாகனத்தின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்த வள்ளிநாயகம், உதவி ஆய்வாளர் முருகேசன் லேசான காயங்களுடன் தப்பினர்.
இதனிடையே, கடந்த 8ம் தேதி வள்ளிநாயகத்தை திடீர் என சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவலர் வள்ளிநாயகம் 11ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வள்ளிநாயகத்தின் மனைவி திலகவதி (28) மற்றும் சேகர் (7), சித்தார்த் (5) ஆகிய 2 குழந்தைகள் மற்றும் உறவினர்கள் 50 பேர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, 'விபத்திற்குள்ளான வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை. அந்த வாகனத்தை பழுதுபார்க்க 7 லட்சம் ரூபாய் செலவை வள்ளிநாயகத்தை கொடுக்கச் சொல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’ என, குற்றம்சாட்டினர்.