மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு 200 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.40 லட்சம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு 200 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில், திருவள்ளூர் மாவட்ட போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காரனோடை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த மும்பை பதிவு எண் கொண்ட 2 கார்களைச் சோதனையிட்டனர். அதில், 221 கிலோ கஞ்சா சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த கஞ்சா பொட்டளங்களைப் பறிமுதல் செய்ததுடன், மகாராஷ்டிராவை சேர்ந்த ஷேக் அன்சார், ஷேக் அகமது, சுஷீல் தாக்கர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா தீர்ப்பை வாசித்தார். அப்போது, மகாராஷ்டிராவை சேர்ந்த ஷேக் அன்சார், ஷேக் அகமது, சுஷீல் தாக்கர் ஆகியோர் கஞ்சா கடத்தப்பட்டது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, 3 பேரயும் குற்றவாளியாக அறிவிக்கப்படுகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-சுரேகா எழில்