தஞ்சாவூர்: பா.ஜ.க கவுன்சிலருக்கு கேக் ஊட்டிய தி.மு.க மேயர் - என்ன நடந்தது?

முன்னாள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
பா.ஜ.க கவுன்சிலருக்கு கேக் ஊட்டிய தி.மு.க மேயர்
பா.ஜ.க கவுன்சிலருக்கு கேக் ஊட்டிய தி.மு.க மேயர்

தஞ்சை மாநகராட்சி 31-வது வார்டு பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் ஜெய் சதீஷ் பிறந்த நாளை தி.மு.க. மேயர் தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கில் உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் மாதந்திர கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும், தஞ்சை மாநகராட்சி 31-வது வார்டு பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் ஜெய் சதீஷிக்கு இன்று பிறந்த நாள் என்பதை அறிந்த மேயர், மாமன்ற கூட்ட அரங்கிலேயே கேக் வெட்டி ஊட்டி விட்டார். கேக் ஊட்டிய துணை மேயர் அஞ்சுகம் பூபதி, "அண்ணே தி.மு.க-வுக்கு வந்துவிடுங்கள்" என்றார்.

தொடர்ந்து, தஞ்சை மாநகராட்சி 31-வது வார்டு பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் ஜெய் சதீஷ்க்கு, அ.தி.மு.க, காங்கிரஸ், அ.ம.மு.க மாமன்ற உறுப்பினர்கள் கேக் ஊட்டியும், சால்வை அணிவித்தும் வாழ்த்தினார்கள்.

இதன் பின்னர் பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் ஜெய் சதீஷ் அங்கிருந்த அ.தி.மு.க உறுப்பினர் கோபாலின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

வழக்கமாக கலவரமாக இருக்கும் தஞ்சை மாமன்ற கூட்டம், பா.ஜ.க உறுப்பினர் ஜெய் சதீஷின் பிறந்த நாளையொட்டி இன்று கலகலப்பாக முடிந்தது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com