காஞ்சிபுரம்: தனியார் பேருந்து மீது பைக் மோதி விபத்து - ஒருவர் பலி - மற்றொருவர் கவலைக்கிடம் - நடந்தது என்ன?

தொழிற்சாலையிலிருந்து பணி முடித்துவிட்டு வரும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது
தினேஷ்
தினேஷ்

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் உணவக ஊழியர் ஒருவர் பலியானார். மற்றொருவர் மருத்துவனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டோல்கேட் அருகே காமாட்சி நகர் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

இவரது 2 மகள்களுக்கு திருமணமாகிய நிலையில், மகன் தினேஷ் (25)தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், தினேஷ், தனது நண்பரான சின காஞ்சிபுரம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த மற்றொரு தினேஷ் (27) என்பவருடன் வெளியில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, கம்மாள தெரு சந்திப்பினை கடக்க முற்பட்ட போது தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. அந்த பேருந்து, கம்மாள தெரு சந்திப்பு பகுதியின் வழியாக வந்தபோது எதிர்பாராத விதமாக தனியார் தொழிற்சாலை பேருந்து மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருவரும் பலத்த காயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்துள்ளனர். இவர்களை காப்பாற்ற யாரும் முன்வராததால் காமாட்சி நகர் தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழ்ந்தார்.

மேலும், உடன் வந்த தினேஷ் என்பவரும் பலத்த காயங்களுடன் துடிதுடித்து கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com