ஆம்பூரில் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சங்கு ஊதும் போராட்டத்தில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ஏ - கஸ்பா பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது.
இந்த நிலையில் ஏ - கஸ்பா பகுதியில் உள்ள பல்வேறு வீதிகளில் சாலை அமைக்க 8 மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், தற்போது அப்பகுதியில் எருது விடும் விழா மற்றும் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.
இதனால், நகராட்சி நிர்வாகம் சார்பில் அவசர அவசரமாக சாலை அமைக்கும் நடைபெற்று வருகிறது. சாலைகள் தரமற்ற முறையில் போடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம்பூர் நகராட்சி முன்னாள் 5-ஆவது வார்டு உறுப்பினர் சுரேஷ் பாபு, ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால், ஆம்பூர் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.