ஆம்பூர்: மது போதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பலி - என்ன நடந்தது?

விமல் சென்ற வாகனம் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியபோது விபத்துக்குள்ளானது
விமல்
விமல்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வாணியம்பாடி அடுத்த நடுப்பட்டரை பகுதியைச் சேர்ந்தவர் விமல் (40). இவர் அதிக அளவு மதுபோதையில் அய்யனூர் - ஆலங்காயம் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, கன்னடிகுப்பம் என்ற பகுதியில் அவரது இருசக்கர வாகனம் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியுள்ளது. இதில், நிலைதடுமாறிய விமல், இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக, இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com