இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் - எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? முழு விவரம்

தேவையில்லாத பணிகளுக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில், இன்று தொடங்கி, வரும் 29-ம் தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் நீடிக்க உள்ளது. இதனால், இந்த காலகட்டத்தில் பொது மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டத்தில் மிகுந்த வெப்பம் இருக்கும் என்பதால், இந்த காலத்தை அக்னி நட்சத்திரம் என்கிறோம்.

'இந்த நாட்களில், வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால், பொது மக்கள் தேவைக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்றும் பருத்தி ஆடைகளை மட்டும் அணிந்து செல்வது நல்லது என்றும், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் தேவையில்லாத பணிகளுக்கு வெளியே செல்வதை தவிர்த்தால், அம்மை போன்ற உஷ்ண நோய்கள் வராமல் பாதுகாக்கலாம் என்றும், அதிக அளவு தண்ணீர், பழங்கள் மற்றும் மோர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்' என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, 'ஜோதிட விதிப்படி அக்னி நட்சத்திர காலத்தில் எந்த ஒரு சுபகாரியங்களும் செய்யமாட்டார்கள். அதாவது, திருமணம், காதுகுத்து மற்றும் புதுமனை செல்லுதல் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகள் நடைபெறாது. எனவே, இந்த காலகட்டத்தில், ஒவ்வொருவரும் எப்படி செயல்பட வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், சிக்கல்களில் இருந்து விடுபடமுடியும்' என்கின்றனர் ஜோதிட ஆர்வலர்கள்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com