சினிமா
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ட்ரெய்லர் வெளியானது
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது
வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், விவேக், மகிழ் திருமேனி, மோகன்ராஜா, கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இத்திரைப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த இத்திரைப்படம் மே 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படியிருக்க இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.