கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஒரு ராம்காம் ஜானர் படமாக உருவாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் கதையை இயக்குநருடன் சேர்ந்து தோனியின் மனைவி ஷாக்ஷியும் எழுதியுள்ளார். ஒரு ஃபேமிலி எண்டர்டைனராக இந்தப் படம் இருக்குமென கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு நதியா ஒரு அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்தப் படத்தில் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த வித அறிவிப்பும் இதுவரை இந்தப் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தப் படம் வரும் ஜுலை மாதம் திரையரங்குகளில் வெளியாகுமெனத் தெரிகிறது.