‘ஜெய்பீம்’க்கு விருது இல்ல..ஆனா பெயரே தெரியாத படத்துக்கு கொடுப்பீங்களா? - பவா செல்லதுரை காட்டம்

ஒருவேலை யூடியூப், இணைதளம் வரவில்லை என்றாலும், எங்கோ ஒரு மூலையில் கதை சொல்லிக்கொண்டு தான் இருப்பேன்
எழுத்தாளர் பாவா செல்லதுரை
எழுத்தாளர் பாவா செல்லதுரை

ஜெய்பீம்’ படத்திற்கு விருது இல்ல,ஆனால் பெயரே தெரியாத படத்துக்கு விருது கொடுப்பீங்களா? என எழுத்தாளர் பவா செல்லதுரை ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து நமது குமுதம் யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர், கதைசொல்லி என பன்முகத்தன்மை கொண்ட பவா செல்லதுரை அளித்த பேட்டியில், ”நான் படிச்ச கதைகளை நண்பர்களிடம் சொல்லலனா எனக்கு தலையே வெடிச்சிடும் அப்படி தான் நான் டிராவலையே ஆரம்பிச்சேன். என் பேரில் நிறைய குற்றச்சாட்டு உள்ளது.உங்களுக்கு நேர் எதிர் அரசியல் தன்மை உள்ளவர் ஜெயமோகன்.நீங்கள் அவருடைய கதைகளை தான் நிறைய சொல்லி இருக்கீங்க அப்படினு சொல்வாங்க. ஜெய்பீம் போன்ற படங்களை தேசிய விருதில் தவிர்த்துவிட்டு பெயரே தெரியாத படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு கதையை சொல்ல குறைந்தது.20 கதைகளை படிக்கிறேன்.இந்த கதையை எப்படியாவது சொல்லிடனும் அப்படினு நிச்சயமா படிக்கல. ஒருவேலை யூடியூப், இணைதளம் வரவில்லை என்றாலும், எங்கோ ஒரு மூலையில் கதை சொல்லிக்கொண்டு தான் இருப்பேன்.

நான் கதை சொல்லாமல் வேறு ஒருவர் கதை சொல்லி அது ரீச் ஆகி இருந்தாலும், என்னோட கருத்து இது தான் என பவா செல்லதுரை தெரிவித்துள்ளார்.

இண்டர்வியூவிற்கு வரும் பாடகரை ஒரு பாட்டு பாட சொல்வதும், இசையமைப்பாளர் வந்தால் எங்களுக்கு ஹார்மோனியத்தில் ஒரு பீட் போட்டு காட்டீடுங்கள் என்று சொல்வதும் மிகப்பெரிய அராஜகம் தான். ஆனால் இந்த அராஜகத்தை நிருபர்கள் நிகழ்ச்சி கொண்டே இருப்பார்கள், அந்த அராஜகத்திற்கு படைப்பாளிகள் எப்போதுமே செவிக்கொடுப்பார்கள்.

ஜெயந்தனின் முக்கியமான கதைகளில் ஒன்றான ‘வாழ்க்கை ஓடும்’படிச்சேன். அந்த கதையை அவர் எழுதி 35 முதல் 40 ஆண்டுகள் இருக்கும். இன்னமும் அது பிரஸ்ஸா இருக்கு. ஒரு சேரில மாமியார், மருமகள் சண்டை நடக்கும்.சேரி பகுதியில் மாமியார், மருமகள் சண்டை எப்படி நடக்குனு சண்டை போட்டவங்களுக்கு தான் தெரியும். அதை கூட இருந்து கவனிச்சிவனுக்கு தெரியும்.உக்காந்து எழுதுறவனுக்கு தெரியாது. அந்த சண்டைகள் எந்த எல்லைக்கும் போகும். அது எப்படி போகும் என்றால், இரு டி.. என் புள்ள வரட்டும்..உன் தாலியை அறுத்துட்டு உன்ன துறத்துறேன்னு மாமியார் சொல்வாள். அதற்கு மருமகளோ, ஏன் என்னை துரத்திட்டு நீயே அவனை கட்டிக்கோ என்று சொல்வாள்.

இதில் உறவு முறைகள், மேன்மை எல்லாம் துள் துளாக உடைஞ்சி போகும்.அந்த மாதிரி ஒரு கதையை ஜெயந்தன் எழுதி இருக்காரு. இந்த பிரச்னை ஏன் வந்துச்சினா? மருமகள் தன் குழந்தையை அடிச்சிட்டா..ஏன் டி நீ குழந்தையை அடிச்சனு மாமியார் கேட்கிறாள். அங்கே தொடங்குது இவர்களுக்குள் பிரச்னை என பவா செல்லதுரை தெரிவித்துள்ளார். இதேபோல் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/OQogSaN16GA?si=mz86l0kAVbrZzctq

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com