நான் ஏன் பிக் பாஸ் வீட்டுக்குள் போகனும்: ரேகா நாயர்

பிரபலம் இல்லாதவர்கள் யாராவது பிக் பாஸ் வீட்டிற்குள் போய் உள்ளார்களா, இப்போது எல்லாமே ஸ்கிரிப்டடு தான் என்று நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்.
நடிகை ரேகா நாயர்
நடிகை ரேகா நாயர்

நடிகை ரேகா நாயர் அதிரடி கருத்துகள், சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர். எதுவாக இருந்தாலும் அதிரடி தான், ஒளிவு மறைவு இல்லாமல் ஓபனாக பேசக்கூடியவர் என்று பலராலும் விமர்சிக்க கூடிய ஒருவர். ரேகா நாயருடன் ஒரு நேர்காணல் அவர் பேசியதாவது, "பிக் பாஸ் வீட்டுக்குள் நான் ஏன் போக வேண்டும். ஒரு காட்டுக்குள் போய் இருக்க சொன்னால் கூட நான் அங்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இருப்பேன் ஆனால் நான் ஏன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க வேண்டும்.

3 சீசனாக நான் பிக் பாஸ் வீட்டிற்குள் போக போகிறேன் என்று சொல்கிறார்கள் முதலில் எனக்கு அங்கு செல்ல விருப்பம் வர வேண்டும் அல்லவா. 100 நாள் போய் அந்த வீட்டிற்குள் இருப்பதற்கு பதில் 100 மரம் வைத்திருக்கலாமே என்று பிக் பால் வீட்டிற்குள் சென்ற என் நண்பர்களிடம் நான் கேட்டேன். பிக் பாஸ் வீட்டிற்குள் போவதற்கு எனக்கு ஈடுபாடு இல்லை.

நடிகை ரேகா நாயர்
நடிகை ரேகா நாயர்

அடுத்து அயோக்கியதனத்தின் உச்சமாக யூட்யூப் நடந்து கொள்கிறது. நான் என்ன பேசுகிறோனோ அதை முழுவதுமாக போடாமல் அதனை எடிட் செய்து ஒட்டி வெட்டி போட்டால் என் கருத்து முழுமையாக சென்றடையாது. பேருந்தில் பயணிக்கிறீர்கள் நீங்கள் அணிந்திருக்கும் ஆடை இடுப்பு தெரிவது போல் இருந்து அதனை ஒரு ஆண் பார்த்து தவறாக நடந்து கொள்கிறான் என்றால் அவனை அடித்து தட்டி கேட்க கூடிய தைரியம் இருந்தால் அது போன்ற ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு ஆடையையும் தவறாக அணிந்து கொள்வீர்கள், ஆண்களையும் தவறாக சொல்வீர்கள் என்றால் என்ன அர்த்தம்?"

இது போல் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார் ரேகா நாயர். அந்த வீடியோவின் முழு தொகுப்பையும் பார்க்க: Click Here

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com