சினிமா
இந்தி இயக்குநரை நிராகரித்த விக்ரம்!
பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் படத்தில் நடிக்க விக்ரம் மறுத்துவிட்டதாக அனுரக் கஷ்யப் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் ‘தேவ் டி’, ‘கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ போன்ற தரமான வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் அனுராக் கஷ்யப். அவரது இயக்கத்தில் தற்போது ‘கென்னடி’ என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”இந்தப் படத்தில் நடிக்க நான் தேர்ந்தெடுத்த முதல் நடிகர் விக்ரம் தான். அவரது உண்மையான பெயர் கென்னடி. ஆக, அவரை மனதில் வைத்து தான் முதலில் இந்தப் படத்தை எழுதினேன்.
ஆனால் அவரைப் பலமுறை தொடர்புகொள்ள முயற்சி செய்தும், என்னால் அவரை நெருங்க முடியவில்லை. ஆகையால் அந்தக் கதாபாத்திரத்தில் ராகும் பட்டை நடிக்க வைத்துள்ளேன்” எனத் தெரிவித்தார். ராகுல் பட், சன்னி லியோன், அபிலாஷ் தப்லியால் ஆகியோர் நடித்த இந்தப் படம் தற்போது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.