முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதி விருப்பம் - 800 பட இயக்குநர் ஸ்ரீபதி

வெங்கட் பிரபு எடுக்கவிருந்த படம் ‘800’
முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதி விருப்பம் - 800 பட இயக்குநர் ஸ்ரீபதி

முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ திரைப்படத்தை குறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.

ஸ்ரீபதி இயக்கத்தில் மாதுர் மிட்டல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘800’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள முரளிதரன் இத்திரைப்படத்தை முதலில் வெங்கட் பிரபு இயக்க விரும்பியதாக கூறியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடியாதது வருத்தமளிப்பதாக கூறிய அவர், மாதுர் மிட்டல் நடிப்பதில் தனக்கு மகிழ்ச்சி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய இயக்குநர் ஸ்ரீபதி, இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி பல பயிற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். இத்திரைப்படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com