சினிமா
வெங்கட் பிரபு - விஜய் இணையும் ‘தளபதி 68’!
நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படமான ‘தளபதி 68’ திரைப்படத்தின் அப்டேட் ஒன்று நேற்று(மே 21) அறிவிக்கப்பட்டது.
அதுபடி, அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். மேலும், அந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஓர் புகைப்படத்தை பதிவிட்டு, ‘என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி அண்ணா..!’ என பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடமும், வெங்கட் பிரபு ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கஸ்டடி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.