பிரான்ஸில் நடைபெற்ற கான்ஸ் திரைப்பட விழா - 2023இல் இந்தியாவைச் சேர்ந்த பல திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், ஸ்பைடர் மேனாக நடித்த தோபி மக்வயருடன் செல்ஃபி எடுத்து அதைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மார்டின் ஸ்கார்செஸ்ஸி இயக்கத்தில் உருவான ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்லவர் மூன்’ திரைப்படத்தின் ஸ்கிரீனிங்கில் இச்சம்பவம் நடைபெற்றது.
மேலும், இந்தத் திரைப்பட விழாவில் ‘லவ் டுடே’ திரைப்பட புகழ் பிரதீப் ரங்கநாதன், இந்தி இயக்குநர் அனுராக் கஷ்யப், விக்னேஷ் சிவன் ஆகியோர் சேர்ந்து கலந்துகொண்டு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கும் படத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார் என கோலிவுட் வட்டாரக்களில் பரவலாகப் பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.