விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் இணையும் கிரைம் திரில்லர் திரைப்படம்!

இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் நடிக்கும் புதிய ஒரு படத்தின் அறிவிப்பு அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் இணையும் கிரைம் திரில்லர் திரைப்படம்!

நடிகர்கள் விதார்த், சந்தோஷ் பிரதாப், கலயரசன் ஆகியோர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அப்படக்குழுவால் இன்று(ஜூன் 30) அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் லிங் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் சகோ கணேசன் இயக்குகிறார். இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்தை ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் திரிகுன், ராதா, ஜான் விஜய், தேஜூ அஸ்வினி, அதுல்யா சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் சகோ கணேசன் பி.வாசு, தங்கர் பச்சன் ஆகிய இயக்குநர்களின் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com