சினிமா
‘விடாமுயற்சி’ கதை எழுதும் பணிகள் நிறைவு
‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் கதை எழுதும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. துணிவு திரைப்படத்துக்கு பின் அஜித் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படியிருக்க இத்திரைப்படத்துக்கு கதை எழுதும் பணிகளை இயக்குநர் மகிழ் திருமேனி நிறைவு செய்துள்ளதாகவும், அதை தயாரிப்பாளருக்கு காண்பிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து தனது பைக் பயணத்தை தொடர நடிகர் அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.