சினிமா
‘விடாமுயற்சி’ படத்திற்காக டாப் ஹீரோயின்களை அணுக தயாராகும் படக்குழு
‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிப்பதற்கு பல முன்னணி கதாநாயகிகளை அணுக படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’ நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தில் நடிக்க பல ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கங்கனா, கத்ரீனா கைஃப் ஆகியோரை அணுக படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது