சினிமா
‘வாடிவாசல்’ பணிகளை துவங்கிய வெற்றிமாறன்
சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் பணிகளை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார்
விடுதலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய அடுத்த படங்கள் குறித்த சில முக்கிய அப்டேட்டுகளை கூறினார். அதில் ஒன்று சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து இது குறித்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானதும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கும் என்று வெற்றிமாறன் கூறியிருந்தார்.
இப்படியிருக்க ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்கு தேவையான ‘கிராஃபிக்ஸ்’ பணிகளை அவர் தொடங்கியுள்ளார். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே கிராஃபிக்ஸ் பணிகளை நிறைவு செய்யும் திட்டத்தில் அவர் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.