சினிமா
தில் ராஜு ஸ்டைலில் பேசி அசத்திய இயக்குநர் வெங்கட் பிரபு
கஸ்டடி திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்டையில் பேசி அசத்தியுள்ளார் வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா க்ரித்தி ஷெட்டி நடித்து உருவாகியுள்ள படம் ‘கஸ்டடி’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 12ஆம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை போல “ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா ஃபேமிலி சென்டிமென்ட் உந்தி” என்று பேசி கைதட்டல்களை அள்ளியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.