சினிமா
’லியோ’-வில் இணைந்த வையாபுரி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் நடிகர் வையாபுரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் நடிகர் வையாபுரி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் வையாபுரி நடிக்கவுள்ளார். மேலும், இது திரைப்படத்தில் மிக முக்கியமாக கதாபாத்திரமாக இருக்குமெனத் தெரிகிறது.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ பாட்டு வரும் ஜுன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.