சினிமா
வெளியானது ‘அநீதி’ படத்தின் டிரெய்லர்!
வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துசாரா விஜயன் நடிக்கும் ‘அநீதி’ படத்தின் டிரெய்லர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துசாரா விஜயன் ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘அநீதி’. இந்தப் படத்தின் டிரெயல்ர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் தெலுங்கில் ‘பிலட் அண்டு சாக்லெட்’ எனும் பெயரில் வெளியாகவுள்ளது. ‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலனின் இந்தத் திரைப்படம் வரும் ஜூலை 21ஆம் தேதி அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஒரு பாடலில் மறைந்த கவிஞன் நா.முத்துகுமாரின் வரிகளும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் வனிதா விஜயகுமார், புகாழ், சுரேஷ் சக்கரவத்தி, அறந்தாங்கி நிஷா, சாரா, சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.