சினிமா
மாரி செல்வராஜுக்கு கார் பரிசு!
இயக்குநர் மாரி செல் வராஜுக்கு கார் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பரிசளித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பல விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ’மினி கூப்பர்’ காரை பரிசளித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.