சினிமா
‘மின்னல் முரளி 2’ அப்டேட் கொடுத்த டொவினோ தாமஸ்
‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் 2ஆம் பாகம் குறித்த அப்டேட்டை கொடுத்த டொவினோ தாமஸ்
பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம் ‘மின்னல் முரளி’. மலையாளத்தில் உருவான இத்திரைப்படம் கேரளா மட்டுமில்லாமல் நாடுமுழுவதும் பலத்த வரவேற்பை பெற்றது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ‘ஒன் லைன்’ இருக்கிறது என்றும், இதை கதையாக மாற்றிவருவதாகவும் நடிகர் டொவினோ தாமஸ் கூறியுள்ளார். இயக்குநர் பாசில் ஜோசப் மற்ற படங்களில் பிசியாக நடித்து வருவதால் படத்தின் பணிகள் மெல்ல நகர்கிறது என்று குறிப்பிட்ட அவர், 2ஆம் பாகம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று உறுதியளித்துள்ளார்.