நெல்சனின் இயக்கத்தில்,ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்' இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் ஜெயிலர் ஒரு பான் இந்திய படமாக உருவெடுத்துள்ளது. மேலும் இப்படத்தில் இருந்து வெளியா காவாலா, ஹுக்கும், ஜுஜுபி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மாஸ் ஹிட்டடித்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஹுக்கும் பாடல் மற்றும் ஜுஜுபி பாடல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது என்று கூறலாம்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமான முறையில் சென்னையில் நடைப்பெற்றது. இதில் ரஜினி படத்தை பற்றியும் நெல்சனை பற்றியும் பல விஷயங்களை பேசினார். இதெல்லாம் படத்தின் மீதான ஹைப்பை மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது 'ஜெயிலர்' படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. முன்பதிவு துவங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் ஜெயிலர் படத்தின் முன்பதிவு அமோகமாக இருக்கின்றது. சென்னையில் 'ஜெயிலர்' படத்தின் டிக்கெட்ற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் மீது இருக்கும் ஹைப்பின் காரணமாக டிக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். மேலும் படத்தை பற்றி பாசிட்டிவான டாக் இருந்து வருவதும் படத்தின் முன்பதிவு அமோகமாக இருக்க ஒரு காரணம் என்கின்றனர். ரஜினிக்கும் நெல்சனுக்கும் வெற்றிப்பாதையை கொடுக்குமா ஜெயிலர்? ஆகஸ்ட் 10 ஆம் தேதி தெரிந்து விடும்.