சினிமா
கிறிஸ்துமஸ் விடுமுறையை குறிவைக்கும் ‘இந்தியன் 2’ படக்குழு
கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை வெளியிட ‘இந்தியன் 2’ படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. நீண்ட இடைவேளைக்கு பின் கமலும், ஷங்கரும் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
இத்தரைப்படம், ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்துடன் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறை சமயத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.