திரைப்படமாகும் இந்தியாவின் முதல் போஸ்ட் மேனின் கதை!

1880இல் நடக்கும் கதைக்களமாக இந்தியாவின் முதல் போஸ் மேனின் கதையாக ‘ஹர்காரா’ என்கிற படம் தயாராகி வருகிறது.
திரைப்படமாகும் இந்தியாவின் முதல் போஸ்ட் மேனின் கதை!

1880இல் நடக்கும் கதைக்களமாக இந்தியாவின் முதல் போஸ் மேனின் கதையாக ‘ஹர்காரா’ என்கிற படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை ராம் அருண் காஸ்ட்ரோ இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான ‘வி ஒன் மர்டர் கேஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் குறித்து அவர் பேசுகையில், ‘இந்தப் படத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று தற்காலத்தில் நடக்கும் கதையாகவும், மற்றொன்று 1800களில் நடக்கும் கதையாகவும் இருக்குமெனத் தெரிவித்துள்ளார்”. இந்தப் படத்தில் இந்தியாவின் முதல் போஸ்ட் மேன் கதாபாத்திரத்தில் நடிகர் காளி வெங்கட் நடிக்கிறார். மேலும், ‘லென்ஸ்’, ‘தலைக்கூத்தல்’ போன்ற படங்களை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com