சினிமா
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவை ஜூலை மாதம் நடத்த படக்குழு திட்டம்
ஜூலை மாதம் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது
நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜெயிலர். படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூலை மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.