சினிமா
சதீஷின் ‘வித்தைக்காரன்’ படத்தின் டப்பிங் வேலைகள் தொடக்கம்!
வித்தைக்காரன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ் ‘வித்தைக்காரன்’ எனும் படத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா, ஜான் விஜய், பவேல் நவகீதன், ஜப்பான் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் முழுக்க, முழுக்க ஒரு டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி வருவதாகத் தெரிகிறது.