சினிமா
சென்னைக்கு திரும்பிய ‘SK 21’ படக்குழு
பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் இருந்த ‘SK 21’ படக்குழு சென்னைக்கு திரும்பியுள்ளது
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘SK 21’. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் காஷ்மீரில் தொடங்கியது. கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படக்குழு சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட் விரைவில் தெரியவரும்.