சினிமா
ஆஸ்கர் விருதை குறி வைக்கும் ‘தங்கலான்’
‘தங்கலான்’ திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தங்கலான்’. சிறிய இடைவேளைக்குப் பின் நேற்று முன்தினம் சென்னையில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. ஆனால் நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது நாட்களுக்கு படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் தங்கலானும் ஒன்று. 1870-1940 காலகட்டத்தில் கர்நாடகா கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படியிருக்க இத்திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு உட்பட 9 சர்வதேச விருதுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மீது படக்குழு அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.