நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ குறித்த அப்டேட் விரைவில் வெளியாகுமென நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடக பக்கத்தில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜீவா பதிலளித்துள்ளார்.
விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ படத்தை விஜய்யின் அபிப்ராயம் பெற்ற இயக்குநர் அட்லீ இயக்கவிருப்பதாகவும், அதை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அது குறித்து நடிகர் ஜீவாவின் சமூக ஊடக பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, “அது குறித்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என பதிலளித்துள்ளார். ஆகவே, விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ளது.