சினிமா
நாளை வெளியாகும் ‘தளபதி 68’ அறிவிப்பு?
தளபதி 68 திரைப்படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது
லோகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை, ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.