தளபதி 68-ல் 2 கேரக்டரில் 'விஜய்': வில்லனாக 'தல' - எகிறும் படத்தின் எதிர்பார்ப்பு

தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி 68 விஜய் -வெங்கட் பிரபு கூட்டணி
தளபதி 68 விஜய் -வெங்கட் பிரபு கூட்டணி

தளபதி 68-ல் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக உள்ளவர் நடிகர் விஜய். இவரின் சமீபத்திய படங்கள் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.

’மாஸ்டர்’, ’பீஸ்ட்’ படங்களை தொடர்ந்து ’லியோ’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு ’பகவதி’ படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் நடித்துள்ளார். இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவுப்பும் வெளி வரவில்லை. இந்த நிலையில், ’தளபதி 68’ படத்தில் வில்லான நடிக்கும் நபர் யார் என ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் முதல்முறையாக தல- தளபதி இணைந்து நடிக்க உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இதுவும் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.

அதேபோல் தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ’அழகிய தமிழ்மகன்’, ’கத்தி’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com