சினிமா
‘தலைவர் 170’ திரைப்படத்தின் கதை இதுவா?
‘தலைவர் 170’ பொய் என்கவுண்டர்கள் பற்றிய படம் என்று தகவல் வெளியாகியுள்ளது
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’. இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இத்திரைப்படத்தில் ரஜினி பொய் என்கவுண்டர்களுக்கு எதிரான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.