ஜெய் பீம் பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஏற்கனவே இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்தப்படத்திற்க்கான இந்தப்படத்திற்கான முக்கியமான வேலையை ரஜினி நிறைவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 'தலைவர் 170' படத்திற்கான லுக் டெஸ்ட்டை அவர் நிறைவு செய்துள்ளதாக இணையத்தில் செய்திகள் கசிந்துள்ளன. தாடியை ட்ரிம் செய்து அட்டகாசமான புதிய தோற்றத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து 'தலைவர் 170' படத்திற்கான லுக் இதுதானா எனக்கேட்டு ரசிகர்கள் ஆர்வமுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து அமிதாப்பச்சன், நானி உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிலரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்தவகையில் ‛ஜெயிலர்' படம் ரஜினி 170 படமும் மல்டி ஸ்டாரர் படமாக உருவாக உள்ளது. இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகிறது.அத்துடன் ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக, போலி என்கவுண்டர்களுக்கு எதிராக போராடும் நபராக ரஜினி இந்தப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்குறது. இந்தப்படத்தின் டிரெய்லர் சோஷியல் மீடியாக்களில் பட்டையை கிளப்பி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப், சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.