தமிழ் சினிமாவில் தனித்துவமான மேக்கிங் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் இயக்குநர் மிஸ்கின். 2006ஆம் ஆண்டு 'சித்திரம் பேசுதடி' மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன இவர் அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
மேலும் சவரக்கத்தி, பேச்சுலர், மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் சேதுபதி நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் படத்தின் முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, விஜய் நடிப்பில் மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் லியோ படத்தில் தனக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது.இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'லியோ' படம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மிஷ்கின்,”விஜய் நடிப்பில் லியோ படத்தை பார்த்துவிட்டேன் எனவும், அப்போது விஜய்யை அவன்..இவன்..என ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், விஜய் ரசிகர்கள் மிஷ்கினை வசைபாடி வருகின்றனர்.இதில் விஜய் ரசிகர் ஒருவர், மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டு எல்லை மீறி உள்ளார்.
இது தொடர்பான பதிவில், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா.! எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே.! மனநலம் குன்றியவனே.! அறிவு கெட்டவனே.! மன்னிப்பு கேள்..! எச்சரிக்கையுடன்..! தளபதி வெறியர்கள்’என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதற்கு விஜய் ரசிகர்கள் தரப்பில் ஆதரவும், மற்றோரு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.