அதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால், ஏ.ஜே.சூர்யா, செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.