சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்த பீரியட் ஃபாண்டசி திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டுமே சுமார் 80 கோடி ரூபாய் வரை வியாபாராம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் ரைட்ஸ் இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் பதிப்புகளுக்கான வியாபாரம் மட்டுமே.
இன்னும் இந்தப் படம் மொத்தமாக 10 மொழிகளில் வெளியாகத்திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற மொழி பதிப்புகளுக்கான டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம், படத்தின் ரிலீஸுக்கு முன்னரே நடைபெறுமெனத் தெரிகிறது. மிகவும் ஒழிவு மறைவாக நடத்தப்படும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவானது. இதைத்தொடர்ந்து, அடுத்தக் கட்டத்திற்காக சூர்யாவும் தன்னை தயார் படுத்த கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தின் டீசர் அலது டிரெய்லர் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.