நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்திருக்கும் திரைப்படம். 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதிகாலை 4 மணி காட்சி எல்லாம் இல்லை. முதல் காட்சி காலை 9 மணிக்கு துவங்குகிறது. தமிழகத்தில் மட்டும் சிறப்பு காட்சிகள் இல்லை என்ற வருத்தத்தில் ரசிகர்கள். இப்படத்தில் இருந்து வெளியான ''காவலா'' ரசிகர்களின் மனதை கவர்ந்து ட்ரெண்டிங்கில் மாஸ் ஹிட்டடித்துள்ளது. மேலும் ஹுக்கும்'' ஜுஜுபி'' பாடல்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் இப்படத்தின் ஹைப் குறையவில்லை. இந்நிலையில் நாடு முழுவதும் ஜெயிலர் பற்றியே மக்களை பேச வைத்துவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
அதாவது பிஸ்லரி நிறுவனத்துடன் சேர்ந்து ஜெயிலரை விளம்பரம் செய்கிறது. இந்தியாவில் எங்கு பிஸ்லரி பாட்டில் வாங்கினாலும் அதில் 'ஜெயிலர்' போஸ்டர் இருக்கும். தண்ணீர் குடிக்கும்போது எல்லாம் ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் முகத்தை பார்க்கலாம். இது குறித்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். இது வேற லெவல் விளம்பரமாக இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு இந்த ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியிருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும், பாட்ஷா படத்திற்கு பிறகு, ஒரு ஆக்க்ஷன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நெல்சன் காட்டியுள்ளார்.ட்ரைலரை பார்த்தவர்கள் முத்துபாண்டியன் வேற லெவலில் வர இருக்கிறார். தலைவர் என்றுமே மாஸ் தான் என்று கமெண்ட் சேட்டு வருகிறார்கள். ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதாவது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும் ஜெயிலர் ரசிகர்களின் மனதை சிறைப்பிடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.