சினிமா
’லியோ’ படத்தை எடுத்த கேமராவில் இவ்வளவு விஷயமா..?
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படாத ’komodo-x' கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தை படமாக்க இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படாத ‘komodo-x' கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கப்படும் இந்தத் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை பிரத்யேகமாக எடுக்க இந்த கேமராவை பயன்படுத்தியதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்திலிருந்து ‘நான் ரெடி’ எனும் முதல் சிங்கிள் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அப்படக்குழுவால் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், அந்தப் பாடலின் புரொமோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.