சினிமா
காஷ்மீரில் ‘SK21’ படக்குழு… நாளை படப்பிடிப்பு
SK 21 திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் ‘SK21’. கமல் ஹாசன் தயாரிக்கும் இத்திரைப்படம் ராணுவத்தை கதைக்களமாக கொண்டுள்ளது. இதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் படக்குழு காஷ்மீரில் தரையிறங்கியுள்ளது. படத்தின் ‘ப்ரீ ப்ரொடக்ஷன்’ பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் நாளை முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.